எங்களுக்கு கிடைக்காத ஒரு விஷயம் தோனி மட்டும் கிடைத்தது ; அதுதான் உண்மையும் கூட ;யுவராஜ் சிங் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் :

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 46 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர்.

மகேந்திர சிங் தோனி ;

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி ரசிகர்களின் மனதை கவிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார் தோனி.

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆரம்ப காலத்திலிருந்து இதுவரை சிறப்பாக வழிநடத்தி மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை :

2011ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அதுவும் இந்தியாவில் நடைபெற்றது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியும், இலங்கை அணியும் இறுதி போட்டி வரை முன்னேறியது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் விளையாடிய இலங்கை அணி 274 ரன்களை அடித்தனர். பின்பு 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் மற்றும் பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறியது இந்திய கிரிக்கெட் அணி. அப்பொழுது தோனி அதிரடியாக விளையாடிய வெற்றியை கைப்பற்றி கொடுத்தார்.

கம்பிர் அதிகபட்சமாக 97 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் மகேந்திர சிங் தோனி இறுதி வரை சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 91 ரன்களை அடித்துள்ளார்.

யுவராஜ் சிங் பேட்டி ;

“சரியாக 2014ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் நான் நிச்சியமாக இந்திய அணியில் இருக்க வாய்ப்புகள் இல்லை, எனக்கு அந்த நம்பிக்கையே போனது. ஏனென்றால் அணியில் எனக்கு எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை, அதுதான் உண்மையும் கூட.”

“அதே தோனிக்கு அப்படி இல்லை, அவர் கிரிக்கெட் விளையாடிய தொடங்கிய காலத்தில் இருந்து ஓய்வு பெரும் வரை விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் ஆதரவு கிடைத்தது. அதனால் தான் 2019ஆம் உலகக்கோப்பை போட்டியில் தோனி இடம்பெற்று விளையாடினார்.”

“ஆதரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அது இந்திய அணியில் பலருக்கு கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. நான் மட்டுமில்லை, ஹர்பஜன் சிங் ,லட்சுமண் , சேவாக் போன்ற வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.”

“அதுமட்டுமின்றி,உலகக்கோப்பை போட்டி வரை க்ரே கிரிஸ்டன் அணியின் பயிற்சியாளராக இருந்தார். அதன்பிறகு எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை எழுந்தது. சரியாக விளையாடியே ஆக வேண்டும் இல்லையென்றால் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள்.”

“ஏனென்றால் அணியில் புதிய பயிற்சியாளர் இடம்பெற்றால் இப்படி தான் நடக்கும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here