சில போட்டிகளில் தோனிக்கு முன்பு ஜடேஜா பேட்டிங் செய்வதற்கு இது மட்டும் தான் காரணம் ; ஸ்டீபன் பிளெம்மிங் பேட்டி ;

ஐபிஎல் 2022: ஐபிஎல் 2022 போட்டிகள் வெற்றிகரமாக 40 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2022 போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை ஐபிஎல் 2022யில் புதிதாக இரு அணிகள் (லக்னோ மற்றும் குஜராத்) ஆகிய இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது.

அதனால் விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னை அணி கடந்த 2020ஆம் ஆண்டு எப்படி மோசமான நிலையில் விளையாடியதோ, அதேபோல தான் இந்த ஆண்டும் விளையாடி வருகின்றனர். ஏனென்றால் இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சென்னை அணி வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதனால் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்பது சந்தேகம் தான்.

ஒருவேளை அந்த நேரத்தில் ஜடேஜாவுக்கு பதிலாக தோனி முன்பே பேட்டிங் செய்ய வந்திருந்தால் போட்டியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் சென்னை அணி மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில் ;

“சென்னை அணி 12வது ஓவரில் விக்கெட்டை இழந்தது. அப்பொழுது தோனியை எப்படி பேட்டிங் செய்ய வைக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாக தோனி 12வது ஓவரில் பேட்டிங் செய்தாரா ? இல்லையே..! அதுமட்டுமின்றி, இதனை பற்றி நாங்கள் பல முறை யோசனை செய்த பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.”

“அதில் தோனிக்கு சரியான நேரம் என்பது 15வது ஒவருக்கு பிறகு தான். அதனால் அதற்கு முன்பு என்ன நடந்தாலும் ஜடேஜா தான் களமிறங்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஜடேஜா கடந்த சில ஆண்டுகளாக இறுதி நேரங்களில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெம்மிங்.”

சென்னை அணி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி தன சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. சரியாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் சில தினங்களுக்கு முன்பு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அதனால் இப்பொழுது தோனியை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரவீந்திர ஜடேஜா வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். ஆனால் சரியான அணி அமையாத காரணத்தால் சென்னை அணிக்கு மோசமான தோல்விகள் வந்துள்ளனர்…!