வீடியோ ; AGE IS JUST NUMBER ..! தோனி அடித்த சிக்ஸரில் வாயடைத்து போன கிரிக்கெட் ரசிகர்கள் ; பா…! மிரட்டல் அடி என்றால் இதுதான் ;

0

உலக கிரிக்கெட் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தோல் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமைந்தது.

ஆமாம், தொடக்க டேவன் கான்வே 1 ரன் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட், ஸ்டோக்ஸ், ராயுடு, தோனி, மொயின் அலி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 178 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக ருதுராஜ் 92, மொயின் அலி 23, அம்பதி ராயுடு 12, ஷிவம் துபே 19, தோனி 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விளையாடி வருகின்றனர். போட்டியில் வெல்லுமா சென்னை ?

வீடியோ :

42வயதான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சென்னை அணியில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் முதல் போட்டியில் தோனி அடித்த சிக்ஸர் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

19வது ஓவரில் ஜோஷ் லிட்டில் வீசிய பந்தை எதிர்கொண்டார் மகேந்திர சிங் தோனி, அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் சிக்ஸர் அடித்தார் தோனி. அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. ஐபிஎல் 2023 தொடரில் இருந்து தோனி விலக வேண்டுமா ?? அல்லது இன்னும் ஓராண்டு விளையாட வேண்டுமா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here