ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இவர் தான் தொடக்க வீரராக இருந்தால் சிறப்பாக இருக்கும் ; ரசிகர்கள் வரவேற்பு : CSK அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. முதல் போட்டியிலேயே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற ஹர்டிக் பாண்டிய முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் , அம்பதி ராயுடு, சிவம் துபே, தோனி போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த சென்னை அணி 178 ரன்களை அடித்தனர்.
அதில் ருதுராஜ் 92, டேவன் கான்வே 1, மொயின் அலி 23, பென் ஸ்டோக்ஸ் 7, அம்பதி ராயுடு 12, சிவம் துபே 19, டோனி 14 ரன்களை அடித்துள்ளனர்.

இப்பொழுது 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதற்கிடையில் ருதுராஜ் கெய்க்வாட் விளாசிய ரன்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட வீரருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2020ல் சென்னை அணியில் அறிமுகம் ஆன வீரர் தான் ருதுராஜ். அறிமுகம் ஆன ஆண்டு பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர் ருதுராஜ். அதனால் சென்னை அணியின் முக்கியமான வீரராகவும் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, அடுத்த சென்னை அணியின்’கேப்டனாக கூட ருதுராஜ் இடம்பெறலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படி அதிரடியாக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மட்டும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுவதே இல்லை. சமீப காலமாகவே ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுல் தொடக்க வீரராக விளையாடும் வரும் நிலையில் ரோஹித்-க்கு பதிலாக ருதுராஜ் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here