ஐபிஎல் 2020: 25வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 2ரன்களையும் , படிகால் 33 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் இறுதிவரை போராடி ஆட்டம் இழக்காமல் 52 பந்தில் 90 ரன்களை எடுத்து , 20 ஓவர் முடிவில் 169 ரன்களை எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடக்க வீரரான வாட்சன் 14 ரன்களிலும் , டுப்லேச்சிஸ் 8 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் இறங்கிய அம்பதி ராயுடு 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். கெதர் ஜாதவுக்கு பதிலாக புதிதாக களம் இறங்கிய ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகிவிட்டார்.
அதன்பின்னர் களம் இறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனி அதிரடியாக விளையாட நினைத்த தோனி 5 பந்தில் ஒரு 6 சிச்கர் அடித்து 10 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகிவிட்டார். அதன்பின்னர் பேட்டிங் செய்த சாம் குரான் 0 ரன்கள், ஜடேஜா 7 ரன்களையும் , பிராவோ 7 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இருவரை போராடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. மீண்டும் சென்னை அணிக்கு ஒரு தோல்வி. சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த முறை ப்ளேஆப் சுற்றுக்குள் சென்னை அணி வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
போட்டி முடிந்த பின்பு தோனி அளித்த போட்டியை பார்த்த ரசிகர்கள் மிகவும் வேதனையுடன் இருக்கின்றன?? சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வியால் தோனி எடுத்த முடிவு…; ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்…’
முதல் 15 ஓவர்கள் பௌலிங் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். அதுமட்டுமின்றி பேட்டிங் தொடக்க ஆட்டத்தில் அடித்து ஆட வேண்டும். பொறுமையாக ஆடினால் இறுதியில் சுலபமாக இருக்கும். அணியில் ஒருவர் மட்டும் அணியை கொண்டு செல்ல முடியாது. அணியில் உள்ள அணைத்து பேட்ஸ்மேன்களும் அவரவர் ஆட்டத்தை காமிக்க வேண்டும். எவளோதான் தன்னம்பிக்கை கொடுத்தாலும் இறுதியில் அவசரபடுகின்றன என்றும் தோனி வருத்ததுடன் கூறியுள்ளார்.