2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த ஐபிஎல் போட்டி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 3 ஆண்டுகள் கோப்பை உள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக இந்தியாவில் நடந்த வேண்டாம் என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாட்டில் நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் ரசிகர்கள் சிலர் வருத்தத்துடன் இருந்தாலும் சிலர் கோபத்துடன் இருக்கின்றனர்.
சென்னை அணியின் தோல்விக்கு ரெய்னா இல்லாதது தான் காரணம் ? கேதர் ஜாதவ் தான் காரணம்? தோனிக்கு வயது ஆகிவிட்டது என்று பலர் கிண்டல் செய்தும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவதரித்தும் பேசி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏன் இளம் வீரர்களுக்கு இடம் தரவில்லை ?? ஏன் வயதான வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர் என்று பல கேள்விகள் எழுகின்றன.
தோனி அவர்கள் 2014 ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் டடெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். ஏனென்றால் தோனி சில டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை அதுதான் காரணம்… ! அதன்பின்னர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையடிவந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பின்னர் 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அதன்பிறகு ஐபிஎல் போட்டியில் மட்டும் தான் தோனியின் ஆட்டத்தை பார்க்க முடியும் அதனால் நீண்ட நாள் கழித்து ஐபிஎல் 2020யில் தோனி கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருந்தனர்.
அதனால் அந்த சந்தோசம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை ?? இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதனால் புள்ளிப்பட்டியளில் 7வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிடன் நின்றுவிடுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.