ஐபிஎல் 2020 : 25வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோத உள்ளன. இந்த போட்டி துபையில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
விராத் கோலி :
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் பேட்டிங்தேர்வு செய்த இரண்டு முறையும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.அதனால் நாங்கள் பேட்டிங் முதலில் தேர்வு செய்துள்ளோம்.அதுமட்டுமின்றி மிகவும் கடினமான அணியுடன் மோதினால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும்.
நான் மற்றும் தோனி இருவரும் எதிராக விளையாடி அதிக நாட்கள் ஆகிவிட்டது. ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே என்றாலே போட்டிதான் என்று கூறியுள்ளார் விராத் கோலி.
தோனி :
இந்த ஐபிஎல் 2020 போட்டியில் கவனச்சிதறல் என்பது மிகவும் குறைவு தான். எங்கள் அணிக்கு புள்ளிகள் தேவைபடுகின்றன. கடந்த போட்டிகளில் நாங்க சில தவறுகளை மேற்கொண்டோம் அதனை இப்பொழுது சரி செய்யவுள்ளோம். நான் நன்றாக பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளேன் அதனை நன் மிடில் ஓவரில் கண்டிப்பாக வெளிப்படுதுவேன் என்று கூறியுள்ளார் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி.
அணி விவரம்:
சென்னை சூப்பர் கிங்க்ஸ் :
தோனி ,வாட்சன் , டுப்லேச்சிஸ் , அம்பதி ராயுடு , ஜெகதீசன் , சாம் குரான்,ஜடேஜா , பிராவோ, தாகூர் , தீபக் சகார் ,கரன் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
விராத் கோலி , படிக்கல் , பின்ச், வில்லிர்ஸ் , சிவம் துபே, க்றிஸ் மோரிஸ், சுந்தர், சாஹல், நவ்தீப் சைனி.