துபாய்: பல தடைகளை தாண்டி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது இந்த வருட ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள். ஏனென்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் , இந்த வருட ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது அதுவும் ரசிகர்கள் யாரும் இல்லாமல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2008 ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இந்த ஆண்டு தான் முதல் முறையாக ப்லே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போது. இந்த சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்களுக்கும் மிகவும் வருத்தம்தான்.
41வது போட்டியில் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கினார். முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் சென்னை அணியில் இரு பேட்ஸ்மேன்கள் புதிதாக களம் இறங்கினார். அதில் ஓப்பனிங் ஆக இறங்கிய ருதுராஜ் 0 ரன்களிலும் ஜெகதீசன் 0 ரங்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் 1 ரன்கள் , ராயுடு 2 ரன்கள் ,தோனி 16 ரன்கள் , ஜடேஜா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இறுதிவரை போராடிய சாம் குரான் 52 ரன்கள் மற்றும் இம்ரான் தாகிர் 13 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 114 ரன்களை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக்கின் ஆட்டம் சென்னை அணியை சாய்த்தது , அவர் ஆட்டம் இழக்காமல் 46 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் இணைந்து இஷான் கிஷான் 68 ரன்களை எடுத்துள்ளார்.
மும்பை இந்தின்ஸ் அணியில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விழித்தி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியே போவது ஐபிஎல் சரித்திரத்தில் இதுவே முதல்முறை ஆகும். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளார்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த தல தோனி ….!! சந்தோசத்தில் ரசிகர்கள்…! அப்படி என்ன செய்தார்.?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்வியால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று பல ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தநிலையில். தோனி அவர்களின் கருத்துக்கு ஏற்ப இளம் வீரர்களான ஜெகதீசன் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரையும் மும்பை இந்தின்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவைத்தார். ஆனால் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எந்த ஒரு ரன்களையும் எடுத்து தரவில்லை. அதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.