மும்பை இந்தின்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஏன் சிஎஸ்கே எதிரான போட்டியில் விளையாடவில்லை ? காரணம் இதோ… !!

துபாய்: பல தடைகளை தாண்டி பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது இந்த வருட ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள். ஏனென்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் , இந்த வருட ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது அதுவும் ரசிகர்கள் யாரும் இல்லாமல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2008 ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பித்த ஐபிஎல் போட்டி முதல் 2019 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இந்த ஆண்டு தான் முதல் முறையாக ப்லே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போது. இந்த சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு மட்டுமின்றி சென்னை அணியின் ரசிகர்களுக்கும் மிகவும் வருத்தம்தான்.

41வது போட்டியில் பொள்ளார்ட் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் களம் இறங்கினார். முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தின்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் சென்னை அணியில் இரு பேட்ஸ்மேன்கள் புதிதாக களம் இறங்கினார். அதில் ஓப்பனிங் ஆக இறங்கிய ருதுராஜ் 0 ரன்களிலும் ஜெகதீசன் 0 ரங்களில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் களம் இறங்கிய டுபலஸிஸ் 1 ரன்கள் , ராயுடு 2 ரன்கள் ,தோனி 16 ரன்கள் , ஜடேஜா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை போராடிய சாம் குரான் 52 ரன்கள் மற்றும் இம்ரான் தாகிர் 13 ரன்களை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரன்களை சேர்த்தனர். நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 114 ரன்களை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களம் இறங்கிய மும்பை இந்தின்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டிகாக்கின் ஆட்டம் சென்னை அணியை சாய்த்தது , அவர் ஆட்டம் இழக்காமல் 46 ரன்களை எடுத்துள்ளார். அவருடன் இணைந்து இஷான் கிஷான் 68 ரன்களை எடுத்துள்ளார்.

மும்பை இந்தின்ஸ் அணியில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விழித்தி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியே போவது ஐபிஎல் சரித்திரத்தில் இதுவே முதல்முறை ஆகும். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வேதனையில் உள்ளார்கள்.

மும்பை இந்தின்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஏன் சிஎஸ்கே எதிரான போட்டியில் விளையாடவில்லை ? காரணம் இதோ… !!

மும்பை இந்தின்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனான ரோஹித் சர்மா.. பஞ்சாப் அணியுடன் இறுதியாக விளையாடிய 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் போட்டியின் பயிற்சியில் ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது.

அதனால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொள்ளார்ட் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பொள்ளார்ட் தலைமையேற்றர். அடுத்த வரும் போட்டிகளில் ரோஹித் சர்மா கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது.