நான் ஏபிடி வில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றிய பிறகும் தோனி என்னை திட்டினார் ; சிஎஸ்கே வீரர் பேட்டி ;

0

உலக கிரிக்கெட் லீக் தொடரில் மிகவும் புகழ்பெற்ற போட்டியாக தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆன ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் வரவேற்பை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்தம் 15 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளனர். இப்பொழுதெல்லாம் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துவிடும் என்பது மாற்றுக்கருதில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

கடந்த 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் டி-20 போட்டிகள் அறிமுகம் ஆன முதல் ஆண்டில் இருந்து இப்பொழுதுவரை மகேந்திர சிங் தோனி தான் சென்னை அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அதிக லீக் போட்டிகளில் மற்றும் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது.

தோனி கேப்டனாக வழிநடத்திய இந்திய அணியாக இருக்கட்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக இருக்கட்டும் எப்பொழுதும் ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுத்தால் அதிகமான போட்டிகளில் விளையாட வைப்பது தான் அவருடைய பழக்கம். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு கிரிக்கெட் போட்டியில் பிரபலமான வீரர்களும் உள்ளனர், வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற முடியாமலும் சிலர் உள்ளனர் என்பது தான் உண்மை.

அதேபோல தான் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஈஸ்வர் பாண்டே, நேற்று முன்தினம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அப்பொழுது அவர் தோனியை அப்ற்றி சில முக்கியமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

ஈஸ்வர் பாண்டே பேட்டி :

“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான பேட்டியில் விளையாடி கொண்டு இருந்தோம். அப்பொழுது டிவில்லியர்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். அப்பொழுது தோனி என்னிடம், பந்தை கொடுத்து யாக்கர் மட்டும் வேண்டும் நன்றாக பவுலிங் செய்ய என்று கூறினார். முதல் மூன்று பந்தில் அவர் ரன்களை அடிக்கவில்லை. பின்பு ஒரு பவுண்டரி அடித்தார், இறுதி பந்து யாக்கராக மாறிவிடுமோ என்று நான் நினைத்தேன்.”

“அதேபோல நான் யாக்கர் தான் வீசினேன். ஆனால் அது Low Full Toss பந்து, அதில் அவரது (டிவில்லியர்ஸ்) விக்கெட்டை கைப்பற்றிவிட்டேன். அதன்பின்னர் தோனி என்னிடம் வந்து திட்டினார். அவர் அப்பொழுது கடினமாக பேசவில்லை என்றாலும், நான் தான் யாக்கர் பவுலிங் செய்ய வேண்டாம் என்று தான் சொன்னேன் என்று சொன்னார் (தோனி). இந்த தகவலை நேற்று ஈஸ்வர் பாண்டே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here