டி-20 உலகக்கோப்பை :
ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு:
நேற்று முன்தினம் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதில் பலர் ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தான். ரோஹித் சர்மா (கேப்டன்). ராகுல் (துணை கேப்டன்), சூரியகுமார் யாதவ், விராட்கோலி, தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்சத்தீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதனை தவிர்த்து முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார் மற்றும் ரவி பிஷ்னோய் காத்திருப்பு வீரர்களாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்..!
இந்திய அணியில் தொடரும் பிரச்சனை :
கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மட்டும் சரியாக இருப்பது இல்லை. சுமார் 8 வீரர்களுக்கு மேல் தொடக்க வீரராக கடந்த 12 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதனால் தொடக்க வீரராக யார் தான் களமிறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாவே உள்ளது.
ஆனால் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தான் தொடக்க வீரராக விளையாட போகின்றனர். ஆனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையுமா ? ஏனென்றால் ஆசிய கோப்பை போட்டிகளில் கே.எல்.ராகுலின் விளையாட்டு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.
பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்து வருகிறார் கே.எல்.ராகுல். ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடிய போட்டியில் மட்டும் தான் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்துள்ளார். மற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா அறிவுரை:
எப்பொழுது ஒரு அணியில் இருக்கும் தவறை பற்றி மற்ற அணிகளின் முன்னாள் வீரர்கள் கருத்து சொல்வது வழக்கம் தான். அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய அணியின் தொடக்க வீரர்களை பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் ” விராட்கோலி மீண்டும் அவரது போர்மிற்கு திரும்பிவிட்டார். அதனால் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நிச்சியமாக ரன்களை அடித்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆசிய கோப்பை போல தான் டி-20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி இருக்கும் என்று கூறியுள்ளார் கனேரியா.”
மேலும் இந்திய வீரர்களின் பட்டியலை பற்றி பேசிய அவர் ; ” இதில் இந்திய தவறு செய்துவிட்டது. ஏனென்றால் உம்ரன் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளரை காத்திருப்பு பட்டியலில் ஆவது வைத்திருக்க வேண்டும். அப்பொழுது பயிற்சி செய்ய உதவியாக இருந்திருக்கும். உம்ரன் மாலிக் பவுலிங் மிகவும் வேகமாக இருப்பதால் பயிற்சி செய்ய பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.”
பாக்கிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா சொல்வது போல இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாட வேண்டுமா ? யார் யார் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!