இந்த மூன்று வீரர்கள் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும் ; முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார் பேட்டி ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

indian Team 2

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய டி-20 போட்டிகளில் இலங்கை அணி சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். அதில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தான் விளையாடி வந்தது.

முதல் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்திய சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் சூப்பர் 4 லீக் சுற்றில் மோசமான அளவில் விளையாடிய இந்திய இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக மாறியது தான் உண்மை.

இருப்பினும் வருகின்ற டி-20 ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்காக தீவிரமான ஆலசோனையில் உள்ளது இந்திய. அனைத்து நாடுகளும் அவரவர் அணிகளை அறிவித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்சத்தீப் சிங்.

இந்த அணியில் இருக்கும் பலர் ஆசிய கோப்பை ப்ளேயிங் 11ல் விளையாடி உள்ளனர். அப்படி இருக்கும் நிலையில் டி-20 உலகக்கோப்பை போட்டியில் மட்டும் எப்படி வெற்றிபெற முடியும் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மற்ற சில வீரர்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலீப் வெங்சர்கார் மூன்று வீரர்களை பற்றி தெரிவித்துள்ளார். அதில் ” நான் நிச்சியமாக முகமத் ஷமி, உம்ரன் மாலிக் மற்றும் சுப்மன் கில் போன்ற மூன்று வீரர்களை உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்திருப்பேன்.”

இதையும் படியுங்க : தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக என்வாழ்க்கையில் மாற்றம் நடந்திருக்கும் ; பவுலர் ஓபன் டாக் ;

“நிச்சியமாக அதிகமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்திருப்பேன். ஏனென்றால், அவர்களுது ஐபிஎல் சீசன் மிகவும் அற்புதமாக இருந்தது. பின்பு யார் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டுமென்று நான் சொல்ல விரும்பவில்லை. அது கேப்டன், பயிற்சியாளர் கையில் தான் இருக்கிறது.”

“இருப்பினும் எனக்கு தெரிந்து இப்பொழுது 4வதாக பேட்டிங் செய்து கொண்டு வரும் சூரியகுமார் யாதவ் 5வதாக (பினிஷர்) பேட்டிங் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை போல டி-20 போட்டி கிடையாது. இந்த இடத்தில் தான் இவர் விளையாட வேண்டுமென்று சொல்ல முடியாது. யார் வேண்டுமானலும் எந்த இடத்தில் வேணாலும் விளையாடலாம் என்று கூறியுள்ளார் திலீப் வெங்சர்கார்.”

டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் இடம்பெற்றிக்க வேண்டும் என்று நீங்க நினைக்கீறிர்கள் ? உங்கள் அன்பான கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here