ஐபிஏல் 2021 : இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. அதனால் நிச்சியம் நல்ல ஒரு பொடியாகவும் ஐபிஎல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்நிலையில் சில ஐபிஎல் அணிகள் அவரவர் ஹாம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அதனால் சென்னை வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார். இதற்கு முக்கியமாக காரணம் ஐபிஎல் ஆரம்பித்த முதல் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் ப்லே – சுற்றுக்குள் நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
Read More : இந்த இருவரும் ஓப்பனிங் செய்தால் இந்தியா அணிக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்; சுனில் கவாஸ்கர் …!
ஆனால் சரியான அணி கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமையவில்லை அதற்கு முக்கிய காரணம் ரெய்னா மற்றும் ஹர்பாஜன் சிங். இவர்கள் இருவரும் அணியில் இல்லாததால் தோனி முடிந்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான முறையில் வழிநடத்தினார். இருந்தாலும் இறுதி வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது.
ஆனால் இந்த ஆண்டு நிச்சியம் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் எழுந்து வரும் என்று ரசிகர்கள் மிகவும் நம்புகின்றன. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி , ரெய்னா மற்றும் சில வெருகல் சென்னையில் உள்ள மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று நடந்த பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர் மழையாக தெறிக்கவிட்டு கொண்டு இருக்கிறார். சிஎஸ்கே அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோ :