இருந்தாலும் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ; கவுதம் கம்பிர் அதிரடி கருது … யார் அந்த வீரர் !

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிக்கான இறுதி டி-20 போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் சிறப்பாக நடந்த முடிந்தது. அதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங் தேர்வு செய்தனர். இந்தியா அணியில் முதலில் ஓப்பனிங் செய்ய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்.

20 ஓவர் முடிவில் இந்தியா அணி 2 விக்கெட் இழந்த நிலையில் 224 ரன்களைஎடுத்துள்ளது. அதில் ரோஹித் சர்மா 64 ரன்கள், விராட் கோலி 80 ரன்கள், சூரியகுமார் யாதவ் 32 ரன்கள் மற்றும் ஹர்டிக் பாண்டிய 39 ரன்கள் எடுத்துள்ளனர். 225 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியா இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.

ஜேசன் ராய் ஒரு ரன்கள் கூட அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் ஜோஸ் பட்லர் மற்றும் மலன் ஆகிய இருவரு இங்கிலாந்து அணியை சிறப்பான முறையில் கொண்டுசென்றனர். இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த இறுதி போட்டியில் இந்தியா அணி வென்றதால் தொடரை கைப்பற்றியது இந்தியா கிரிக்கெட் அணி.

இதையும் படிங்க: வீடியோ ; சிஎஸ்கே ரசிகர்களே தயாரா நீங்க ? தல தோனியின் சிக்சர் வீடியோ வைரலாகி வருகிறது.

இருந்தாலும் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ; கவுதம் கம்பிர் அதிரடி கருது … யார் அந்த வீரர் !

முதல் நான்கு டி-20 போட்டிகளிலும் கே.எல்.ராகுல் அணியில் இருந்தார். அவர் நான்கு போட்டிகளில் சேர்த்தி 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் முதல் இரு போட்டிகளில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். முன்றாவது போட்டியில் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தார். இருந்தாலும் அவர் அருமையமான வீரர் அவரை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது என்று கோலி சொல்லிருந்தார்.

இருந்தாலும் 4வந்து டி-20 போட்டியிலும் வெறும் 15 ரங்களில் ஆட்டம் இழந்ததால் அவர் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது என்றே சொல்லலாம். அதனால் கே.எல்.ராகுலை இறுதி டி-20 போட்டியில் கலந்து கொள்ள முடியமால் போய்விட்டது. அதற்கு பதிலாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார்.

இதற்கு பேட்டியளித்த இந்தியா அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் ; இந்திய அணியில் 6 பௌலர்க்கு ( நடராஜன், சாகர், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், தாகூர் , ஹர்டிக் பாண்டியா) பதிலாக ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.

இந்த டி-20 போட்டியை வைத்து மட்டும் அவரை தவறாக சொல்ல முடியாது என்றும் வரும் ஐபிஎல் போட்டிகளில் அவர் எப்படி விளையாட போகிறார் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.