கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் ஆரம்பிக்க தொடங்கியது. இதுவரை 43 போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பல சுவாரசியமான நிகழ்வுகளை கொண்டுள்ளது.
43வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி பௌலிங் தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ராகுல் 27 ரன்கள் , மந்தீப் சிங் 17 ரன்கள், கெயில் 20 ரன்கள் என்ற நிலையில் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் வந்த பூரான் 32 ரன்கள் , மஸ்வெல் 12 ரன்கள், தீபக் 0 ரன்கள், கிறிஸ் ஜோர்டான் 7 , அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணி.
நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 114 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
தந்தை இறந்த செய்தியை கேட்ட பிறகும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்….!!! ரசிகர்கள் நெகிழிச்சி…. யார் அந்த வீரர்?
நெற்று காலை மந்தீப் சிங் தந்தை இறந்த செய்தியை கேட்டதும் மனம் உடைந்து போனார்…. இனிவரும் போட்டிகள் பஞ்சாப் அணி மிகவும் முக்கியமானது ஏனென்றால் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டும். அதனால் தான் அணிக்காக விளையாட முடிவு செய்த மந்தீப் போட்டியில் களம் இறங்கினார். ஒரு வழியாக போட்டியை வென்றது. அந்த அணியின் கேப்டன் ராகுல் இந்த வெற்றியை நாங்கள் மந்தீப் தந்தைக்கு அர்ப்பணிப்பு செய்கிறோம் என்று கூறியுள்ளார் ராகுல். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அனந்ததுடன் இருக்கின்றன.