கேதர் ஜாதவ் பற்றி மறைமுகமாக பேசிய தோனி… சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்….. என்ன நடந்தது!!!

கேதர் ஜாதவ் பற்றி மறைமுகமாக பேசிய தோனி… சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்….. என்ன நடந்தது!!!

ஐபிஎல் 2020: நேற்று நடந்த ஐபிஎல் 2020 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் உள்ள அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ்:

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் சுமன் கில் மற்றும் ராகுல் திருப்பதி நல்ல ஒரு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினர். சுமன் கில் 11 ரன்களிலும், நித்திஷ் ராணா 9 ரன்களிலும், சுனில் நரேன் 17 ரன்களிலும், மோர்கன் 7 ரன்களிலும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிவரை போராடிய ராகுல் திருப்பதி 51 பந்தல் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ராகுல் திருப்பதியின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நல்ல ஒரு ரன்களை எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 167 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தனர். 

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன் வாட்சன் 50 ரன்களிலும், டு பிளேசிஸ் 17 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

வேறு வழியில்லாமல் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி எதிர்பாராவிதமாக 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எந்த பயனும் இல்லை.

இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி;;

கொல்கத்தா அணியின் பவுலர்கள் ஒரு சில ஓவரில் சிறப்பாக பந்துவீசினார். எங்கள் அணியில் ஓபனிங் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினாலும் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகி விட்டதால் அதனை சமாளிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி 17 வது ஓவருக்கு பிறகு பவுண்டரிகள் அடிக்க முடியாமல் போய்விட்டது. எங்கள் பவுலர்கள் சரியாக செயல்பட்டாலும் பேட்டிங் அதனை கெடுத்து விட்டது என்று தோனி மறைமுகமாக பேசியுள்ளார்.

சிஎஸ்கே அணி மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் கெதர் ஜதேவ் கடும்கோவத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த ஐபிஎல்2020 ஆரம்பித்து இதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 6 போட்டிகளில் கெதர் ஜதேவ் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடவில்லை…. அதனால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக புதிய வீரரை எதிர்பார்க்கலாம்.