சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் சொன்ன செய்தியைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளார்
ஐபிஎல் 2020: 21வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. இந்த போட்டி துபாயில் உள்ள அபு தபி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் எடுத்தனர். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ் 7 ரன்களை எடுத்து எடுத்துள்ளார். இரு ரன்கள் கூட எடுக்காத கேதர் ஜாதவ் ஒருவேளை பவுண்டரிகளை அடித்து இருந்தால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இருக்கும்.
தோல்வியைக் குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்;;
இப்போது இருக்கும் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பான அணியாகும். இதில் மாற்றம் செய்வதற்கு எந்த அவசியமுமில்லை. சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் திறன் கேதர் ஜாதவ்க்கு இருப்பதால் அவரை நாங்கள் நம்பினோம் ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு எதிராக மாறி விட்டது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால் இப்போது இருக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் பேட்ஸ்மேன் ,பவுலர்கள், மற்றும் ஆல்ரவுண்டர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அணியில் மாற்றம் செய்ய தேவையில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். ஏனென்றால் கெதர் ஜாதவ்வுக்கு பதிலாக நல்ல ஒரு வீரரை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பதிலை கேட்ட ரசிகர்கள் மிகவும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.