தோல்விக்கு இந்த ஒரு காரணம் தான்..! தோனி சொன்ன அந்த காரணம் சரிதான்..!

ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டி தொடரின் 27வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. நேற்று இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் சில தயக்கம் இருந்தாலும், அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்களை எடுத்துள்ளனர்.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 58 ரன்கள், சுரேஷ் ரைனா ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 22 ரன்களை விளாசியுள்ளனர். தொடக்கத்தில் ருதுராஜ் விக்கெட் உடனடியாக இழந்தாலும், அதன்பின்னர் பின்னர் பேட்டிங் செய்த மொயின் , ராயுடு போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி உள்ளார்.

பின்பு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி 6 விக்கெட் இழந்த நிலையில் 219 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியுள்ளனர், மும்பை இந்தியன்ஸ் அணி.

அதில் அதிபட்சமாக டி-காக் 38 ரன்கள், ரோஹித் சர்மா 35 ரன்கள், சூரியகுமார் யாதவ் 3 ரன்கள், குர்னல் பாண்டிய 32 ரன்கள், பொல்லார்ட் 87 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 16 ரன்களை விளாசியுள்ளனர். வெற்றியை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 புள்ளிகளை பெற்று 4வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு தோனி அளித்த பேட்டியில் ; இந்த போட்டி மிகவும் அற்புதமாக ஒன்றை இருந்தது. எங்கள் அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். அதிலும் சாம் கரண் 17வது ஓவர் பந்து வீசியது மிகவும் அற்புதமாக இருந்தது.

நாங்கள் எப்படி அதிக ரன்களை அடித்தோமோ… அதே போலத்தான் அவர்களும் அடிப்பார்கள் என்று தெரியும். ஆனால் இறுதி நேரத்தில் பொல்லார்ட் கேட்ச் டுப்ளஸிஸ் அதனை தவறவிட்டார். அதற்கான தண்டனையை நங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்…! அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தோனி கூறியுள்ளார்.