இவரை போன்ற ஒரு வீரர் கிடைப்பது அரிது ; எந்த சூழ்நிலையிலும் இவரால் சிறப்பாக விளையாட முடியும் ; தோனி ஓபன் டாக் ;

0
Advertisement

நேற்று சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு எதிர்பார்த்த தொடக்க ஆட்டம் அமையவில்லை. கான்வே, ருதுராஜ், ரஹானே, மொயின் அலி போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்த காரணத்தால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இறுதி ஓவர் வரை விளையாடிய சென்னை அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 167 ரன்களை அடித்தனர்.

அதில் ருதுராஜ் 24, கான்வே 10, ரஹானே 21, சிவம் துபே 25, அம்பதி ராயுடு 23, ரவீந்தர் ஜடேஜா 21, மகேந்திர சிங் தோனி 20 ரன்களை அடித்தனர். பின்பு 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு மோசமான பேட்டிங் அமைந்தது.

டெல்லி அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான டேவிட் வார்னர் இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்பு மார்ஷ் விக்கெட்டை இழந்ததால் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது. அதுமட்டுமின்றி, இறுதி ஓவர் வரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 140 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக பிலிப்ஸ் சால்ட் 17, மனிஷ் பாண்டே 27, ரிலீ ரோஸ்சோவ் 35, அக்சர் பட்டேல் 21 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

புள்ளிபட்டியலின் விவரம் :

இதுவரை நடந்து முடிந்த போட்டியின் அடிப்படையில் ;

  1. குஜராத் டைட்டன்ஸ் – 16 புள்ளிகள்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் – 15 புள்ளிகள்
  3. மும்பை இந்தியன்ஸ் – 12 புள்ளிகள்
  4. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – 11 புள்ளிகள்
  5. ராஜஸ்தான் ராயல்ஸ் – 10 புள்ளிகள்
  6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -10 புள்ளிகள்
  7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 10 புள்ளிகள்
  8. பஞ்சாப் கிங்ஸ் – 10 புள்ளிகள்
  9. சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் – 8 புள்ளிகள்
  10. டெல்லி கேபிட்டல்ஸ் – 8 புள்ளிகள்

போட்டி முடிந்த பிறகு வெற்றியை பற்றி பேசிய தோனி :

“உண்மையிலும் எது சிறந்த ஸ்கோர் என்று தெரியவில்லை. அதனால் தான் எனக்கு என்னுடைய பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்யவேண்டுமென்று நினைத்தேன். 166 அல்லது 170 ரன்கள் தான் போதுமான அளவு, இருப்பினும் பேட்டிங் வலுவாக இருப்பதால் அதற்குமேலும் ரன்களை அடிக்க முடியும்.”

“இதில் ஒரு நல்ல விஷயம் மொயின் அலி மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகிய இருவரும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கூடிய விரைவில் ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளது. அதனால் அனைவரும் அவரவர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, ருதுராஜ் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் எப்பொழுதும் ஷாட்ஸ்-ஐ சுலபமாக அடித்து வருகிறார்.”

“சூழ்நிலைக்கு ஏற்ப அவரால் விளையாட முடியும். இவரை போன்ற வீரர் அணிக்கு கிடைப்பது கடினம் தான். போட்டியை முழுமையாக புரிந்து கொள்ளும் வீரர் தான் அணிக்கு தேவையான விஷயம். இதுதான் என்னுடைய வேலை, நான் என்னுடைய அணியிடம் சொல்லிவிட்டேன், என்னால் உங்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும். எண்னை ரன்கள் அடிக்க வைக்காதீர்கள் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here