வீடியோ : பாவம் ப..! பெங்களூர் ரசிகரை மரணமாக கலாய்த்த மும்பை ரசிகர்கள் ; இணையத்தை கலக்கும் வீடியோ :

0

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்த 54-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

போட்டியின் சுருக்கம் :

முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இருப்பினும் இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்தது பெங்களூர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 199 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக டூப்ளஸிஸ் 65, மேக்ஸ்வெல் 68, தினேஷ் கார்த்திக் 30, கேதர் ஜாதவ் 12*, ஹசரங்க 12* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

அதிலும் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹால் வதேரா ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் 16.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 200 ரன்களை அடித்தனர். அதனால் 4 விக்கெட்டை வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதனால் புள்ளிபட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கும், பெங்களூர் அணி 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். முதல் நான்கு இடத்திற்கு பல அணிகளுக்கு இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

வீடியோ :

நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவ் அதனை தகர்த்திவிட்டார். ஆமாம், 35 பந்தில் 83 ரன்களை விளாசியுள்ளார். அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுலபமான வெற்றி கிடைத்தது.

இதற்கிடையில், நேற்று வான்கடே மைதானத்தில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிலர் பெங்களூர் ரசிகரை கிண்டல் செய்யும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாத நிலையில் இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here