எனக்கா வயதாகிவிட்டது ; பிட்னஸ் ஆக இருக்கிறேன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்த தோனி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வரும் ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடர் இந்த மாதம் (மே) நிறைவடைய உள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. முதல் நான்கு இடத்தை பிடிக்க அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் உள்ளனர்.

சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் சுருக்கம் :

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 167 ரன்களை அடித்தனர்.

பின்பு 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், தொடக்க வீரரான டேவிட் வார்னர் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். தொடர்ச்சியாக பார்ட்னெர்ஷிப் கிடைக்காமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

இருப்பினும் இறுதி ஓவர் வரை விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 140 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பட்டைய கிளப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி :

இந்தியாவில் ஐபிஎல் 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதில் இருந்து இதுவரை மகேந்திர சிங் தோனி சுமார் 15 ஆண்டுகள் சென்னை அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அதுவும் கேப்டனாக விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர்.

இருப்பினும் 41 வயதான தோனி எப்பொழுது ஓய்வை அறிவிப்பார் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. ஆமாம், கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி எந்த நேரத்திலும் ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தோனி இந்த வயதிலும் அவரது பிட்னஸ் மற்றும் பேட்டிங்-ஐ பார்த்தால் இன்னும் ஓராண்டு ஆண்டு சென்னை அணியில் இருந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான தொடரில் 19வது ஓவரில் இரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here