சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி ….! ஐபிஎல் 2021 வந்தாச்சு….!

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் மிகவும் கடினமான அணியாக திகழ்கிறது. அதுவும் ஐபிஎல் தொடங்கியது முதல் இப்போதுவரை நம்ம தல தோனி தான் கேப்டனாக இருக்கிறார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணி மோசமான போட்டிகளை கடந்த ஆண்டு 2020 சந்தித்தது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பல கட்டுப்பாடுகளை தாண்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுவும் ஐபிஎல் போட்டி அரபு நாட்டுக்கு வந்த ரெய்னா அவரது சொந்த பிரச்சனை காரணமாக மீண்டும் இந்தியா விட்டதால் அவரால் ஐபிஎல் 2020 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்க முடியாமல் போய்விட்டது.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியக்கு ஒரு நல்ல ஒரு அணி அமையவில்லை. பல போட்டிகளில் வீரர்களை மாற்றி மாற்றி ஆடவைத்துள்ளார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதனால் பல அனுபவங்களை கற்றுள்ளதாகவும் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று கூறியுள்ளார் தோனி .

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி ….! ஐபிஎல் 2021 வந்தாச்சுடோய் ..!

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளது அதுவும் இந்தியாவில் அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு சென்னை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்கள்.

தோனிக்கு பிசிஆர் டெஸ்ட் எடுத்து கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதால், அவர் சென்னையில் பயிற்சியை தொடங்கிவிட்டார் என்ற செய்தி வெளியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஹரி நிஷாந்ந் , ஜெகதீசன் , சாய் கிஷோர் போன்ற வீரர்கள் இந்த ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

அவர்களும் தோனி மற்றும் அம்பதி ராயுடுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அவர்களுது தனிமைப்படுத்தும் காலம் முடித்துவிட்டு அவர்கள் பயிற்சியை மேற்றகொண்டுள்ளர்கள் என்று சென்னை அணியின் சி.இ.ஓ. விஸ்வநாதன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here