வீடியோ : திரும்ப வந்துட்டேனு சொல்லு ; தலைவர் என்ன….! பவுலிங் பன்றாரு ; அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் போட்டி திகழ்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்கள் வரவேற்பை பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல்.

இதுவரை 15 சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசன்-ல் காலடியெடுத்து வைக்க போகிறது ஐபிஎல் போட்டிகள். அதுமட்டுமின்றி, கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளும் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட முடியாமல் இருந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிகள் அவரவர் ஹாம் மைதானத்தில் நடக்க போவதாக பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டுள்ளனர். அதனால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை கொண்ட அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சென்னை அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி கடந்த ஆண்டு ஐபிஎல் மோசமாக மாறியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்புங்கள் இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்று தோனி ஓய்வை அறிவித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கடந்த 3ஆம் தேதியில் இருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதிலும் சென்னை அணியின் கேப்டனாக தல மகேந்திர சிங் தோனி பயிற்சியின் போது பவுலிங் செய்து வருகிறார். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

தோனி இதுவரை சர்வதேச போட்டிகளில் மொத்தம் 6 ஓவர் பவுலிங் செய்துள்ளார். அதில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லுமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here