அன்று விராட்கோலி-க்கு செய்த மாதிரி தான் இன்று ரவீந்திர ஜடேஜாவுக்கு இதை தோனி செய்துள்ளார் ; ஒருதுளி கூட மாற்றமே இல்லை ;

ஐபிஎல் ரசிகர்களே தயாராக இருக்கீங்களா ? இன்னும் சரியாக ஒருநாள் மட்டுமே மீதமுள்ளது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகளை கொண்டு விளையாடி வந்தனர். ஆனால் இந்த ஜுரை புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்க போவது அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

தல தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இருப்பினும் தோனி தான் ஐபிஎல் போட்டிகளில் அதுவும் கேப்டனாக விளையாடுவார் என்று அனைவரும் அவரவர் மனதை சமாதானம் செய்துகொண்டு வந்தனர்.

ஆனால் அதுவும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஆமாம், தோனி தனது ஐபிஎல் போட்டிக்கான கேப்டன் பதவியை விட்டு விலகி ரவீந்திர ஜடேஜாவை வழிநடத்த சொல்லிவிட்டார். அதனால் மகேந்திர சிங் தோனி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதான தோனி கூடிய விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலர் சொல்லிக்கொண்டு வந்தனர். ஆனால் கேப்டன் பத்தியில் இருந்து விலகிய தோனி நிச்சியமாக இன்னும் ஓராண்டு அல்லது இரு ஆண்டுகள் நிச்சியமாக சென்னை அணியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தோனி கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன மூன்று ஆண்டுகளில் கேப்டன் பதவியை பெற்றார் தோனி, சரியாக 2007ஆம் ஆண்டு முதல் இந்திய அணியை வழிநடத்த தொடங்கினார். தோனி தலைமையிலான இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை பெற்றுள்ளது.

பின்னர் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட்கோலி-க்கு உறுதுணையாக சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடி வந்தார் தோனி. அதன்பின்னர் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மகேந்திர சிங் தோனி..!

அதேபோல தான் சென்னை அணியிலும் செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் டி-20 போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்து சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது.

பின்னர் விராட்கோலியிடன் கேப்டன் பதவியை கொடுத்த மாதிரி ஐபிஎல் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜ்விடம் கொடுத்துள்ளார் தோனி. அதேபோல இன்னும் சில ஆண்டுகள் நிச்சியமாக அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜாவுக்கு உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தருணம் நிச்சியமாக சென்னை அணி இறுதி போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது போலசென்னை அணி ரசிகர்கள் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் வருத்தத்தில் உள்ளனர்..!