இனிவரும் போட்டிகளில் தோனி விளையாட போவதில்லையா ? ; ஸ்டீபன் பிளெம்மிங் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2023: நேற்று இரவு நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இருப்பினும் அவ்வப்போது வீரர்கள் குறைவான ரன்களை அடித்தாலும் 20 ஓவர் முடிவில் 175 ரன்களை அடித்தனர். பின்பு 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

தொடக்க வீரரான ருதுராஜ் விக்கெட்டை இழந்த காரணத்தால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதி ஓவர் வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றுள்ளது ராஜஸ்தான் அணி.

மகேந்திர தோனியின் பங்களிப்பு :

41வயதான தோனி இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், தோனியின் பேட்டிங் அதிரடியாக இருக்கிறது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 14*, 12, 32* ரன்களை அடித்துள்ளார் தோனி.

இருப்பினும் நேற்று நடந்த போட்டியில் தோனியின் அதிரடியான பேட்டிங் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இறுதி ஒவரிலும் சிக்ஸர் அடித்து பட்டைய கிளப்பினார் தோனி. போட்டியின் போது தோனியின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை பற்றி விளக்கம் கொடுத்த சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில் : ” தோனியின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நடக்கும்போது நன்கு தெரிகிறது. இருப்பினும் அவரது பிட்னஸ் பற்றி குறை சொல்லவே முடியாது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்பே பயிற்சி மேற்கொள்ள தொடங்கினார் தோனி.”

“அவர் (தோனி) ஒரு சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுமட்டுமின்றி, அவரது விளையாட்டில் எங்களுக்கு ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெம்மிங்.”