CSK அணியில் இவர் கடைசி ஓவர் விளையாடினால் எந்த பிளானும் பண்ணவே முடியாது ; சஞ்சு சாம்சன் ;

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் சுருக்கம் :

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 175 ரன்களை அடித்தனர். பின்பு 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு மோசமான தோல்வி தான் மிஞ்சியது.

தொடக்க வீரர் மற்றும் அதிரடி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழந்த காரணத்தால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் டேவன் கான்வே, தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் முடிந்த வரை ரன்களை அடித்தனர். அதுவும் இறுதி நேரத்தில் தோனி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

இருப்பினும் இறுதிவரை போராடிய சென்னை அணி 172 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 4 போட்டிகளில் விளையாடிய 3 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும், சென்னை அணி 5வது இடத்தில் இருக்கின்றனர்.

போட்டி முடிந்த பிறகு வெற்றியை பற்றி பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் : “உண்மையிலும் வீரர்களுக்கு தான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, பவுலர்கள் இறுதிவரை சிறப்பாக பவுலிங் செய்தனர். அதுமட்டுமின்றி, இந்த சேப்பாக்கம் மைதானத்தில் எந்த விதமான நியாபகங்களும் கிடையாது.”

“அதனால் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்று நினைத்தேன். நாங்கள் ஆடம் சம்ப விளையாட வைத்ததற்கு காரணம் இருக்கிறது. பவர் ப்ளே -வில் ருதுராஜ் விக்கெட்டை கைப்பற்றியது நல்ல ஒரு விஷயம். பின்பு சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து ரன்களை கட்டுக்குள் வைத்தனர்.”

“இருப்பினும் கடைசி இரு ஓவர்கள் தான் முக்கியமான ஒன்று. நானும் முடிந்தவரை எல்ல விஷயங்களையும் செய்தேன். ஆனால் பேட்டிங் செய்தது தோனி என்றதால் எந்த பலனும் இல்லை. ஆனால் தோனிக்கு நிச்சியமாக மரியாதையை கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார். அதுமட்டுமின்றி, தோனிக்கு எதிராக எந்த பிளானும் வேலை செய்யாது என்று கூறியுள்ளார் தோனி.”