இவர் மட்டும் பவுலிங் செய்திருந்தால் பாகிஸ்தான் அணி தான் உலகக்கோப்பையை வென்றிருக்கும் ; வாசிம் அக்ரம்

ஆஸ்திரேலியா : கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கியது. முதல் லீக் போட்டிகளில் சிறப்பாகி விளையாடிய பாகிஸ்தான், இந்திய, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

முதல் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை வென்ற பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. பின்பு இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அதனால் இறுதி போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் முதல் இரு விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணியால் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 137 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 138 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணிக்கும் சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியால் ரன்களை அடிக்க முடியாமல் தவித்தனர். பின்பு அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

அதனால் 19 ஓவர் முடிவில் 138 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி உலகக்கோப்பை போட்டியை வென்றது. பாகிஸ்தான் அணிக்கு தோல்விக்கு பவுலருக்கு ஏற்பட்ட காயம் தான் என்று பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “137 ரன்கள் என்பது மிகவும் குறைவான ரன்கள் தான். பேட்டிங் செய்யும்போது பல தவறுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்துள்ளது, ஆனால் முடிந்தவரை பயிற்சிகளை செய்தனர்.”

“அதுமட்டுமின்றி, ஷாஹீன் அப்ரிடி-க்கு காயம் ஏற்பட்டதால் போட்டியின் திருப்புமுனையாக மாறியது. இறுதி பைனல் போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வெறும் 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்த நிலையில் காயம் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் யாருக்கு யார் பவுலிங் செய்ய வேண்டுமென்று ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் அதில் பாகிஸ்தான் அணி தவறு செய்துவிட்டது. மொயின் அலி பேட்டிங் செய்ய வந்த நேரத்தில் அகமத் பவுலிங் செய்திருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வாசிம்.”