வீடியோ : மதிக்காமல் சென்ற நவீன் உல் ஹக் ; ஆத்திரமடைந்து விராட்கோலி ரசிகர்கள் ;

நேற்று 43வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

விராட்கோலி மற்றும் டூப்ளஸிஸ் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை குவித்தனர். இருப்பினும் அவர்களுக்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த நிலையில் 126 ரன்களை அடித்தனர்.

அதில் விராட்கோலி 31, டூப்ளஸிஸ் 44, அனுஜ் ராவத் 9, தினேஷ் கார்த்திக் 16, ஹசரங்க 8* ரன்களையும் விளாசினார். பின்பு 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. தொடக்க வீரரான மாயேர்ஸ் மற்றும் படோனி பெரிய அளவில் தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை.

தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்து கொண்டே வந்த லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையம் இழந்த நிலையில் 108 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

அதனால் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5வது இடத்திலும் உள்ளனர். இந்த போட்டியில் பல வீரர்களுக்கு இடையே பல சண்டைகள் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக விராட்கோலி மற்றும் கம்பிர், விராட்கோலி மற்றும் நவீன் உல் ஹக்.

அனைத்து விதமான போட்டிகளிலும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வருவது சாதாரணம் தான். அதிலும் குறிப்பாக, ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் இயல்பாக மாறியுள்ளது. இருப்பினும், விராட்கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரரான நவீன் உல் ஹக் இடையே மோதல் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

வீடியோ :

இருப்பினும் லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் இறுதியாக விராட்கோலியிடன் பேசி கொண்டு இருந்தார். அப்பொழுது நவீன் மற்றும் விராட்கோலிக்கு இடையேயான சண்டையை முற்றுப்புள்ளி வைக்க நினைத்து நவீன் -ஐ அழைத்தார் கே.ஏல்.ராகுல், ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சென்றார் நவீன். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அக்குரோசமாக நவீன்-ஐ விமர்சனம் செய்து வருகின்றனர். அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.