ரோஹித்துக்கு ஆப்பு ? பக்க பிளான் செய்த பிசிசிஐ ; இனிமேல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் இவர் தான் ; ரசிகர்கள் வரவேற்பு ;

சமீபத்தில் தான் பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியும், டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் முக்கியமான பிரச்சனை :

மற்ற நாடுகளில் எப்பொழுதும் டெஸ்ட் போட்டிக்கு தனி கேப்டன் மற்றும் ஒருநாள், டி-20 போட்டிகளில் ஒரு கேப்டன் என்ற அடிப்படையில் தான் விளையாடி வருகின்றனர். ஏனென்றால் அப்பொழுது தான் அனைத்து மூத்த வீரர்களும் அவ்வப்போது சிறுது ஓய்வு கிடைக்கும் என்றதால். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் அப்படி கிடையாது.

ஆமாம், முன்பு விராட்கோலி அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக விளையாடி கொண்டு வந்தார். அதனை அடுத்து இப்பொழுது ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். ஆனால் அதில் ஏதாவது பயன் இருக்கிறதா ? ஏனென்றால் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி ஐந்து முறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார் ரோஹித் சர்மா.

அதனால் இந்திய கிரிக்கெட் அணியையும் வழிநடத்தி உலகக்கோப்பயில் இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பது கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால், ஆசிய டி-20 போட்டியிலும், டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இரு தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணிக்கு தோல்வியாக இருக்கும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சிறந்த கம்பேக் கொடுத்த ஹர்டிக் பாண்டியவை கேப்டனாக அறிவிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டி-20 போட்டிகளில் ஹர்டிக் பாண்டியவை கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாட உள்ளனர்.

அதனால் ஜனவரி மாதத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதில் ஹர்டிக் பாண்டியவை கேப்டனாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்திய ஹர்டிக் பாண்டிய கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய ஹர்டிக் பாண்டிய சிறப்பாக வழிநடத்தி தொடரை வெல்ல காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமையுமா ? இந்திய கிரிக்கெட் அணியில் யார் சிறந்த கேப்டன் ?