உடனடியாக இவரை இந்திய அணியில் தேர்வு செய்யுங்கள் ; ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 56 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

நேற்று நடந்த போட்டியின் சுருக்கம் :

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், நிதிஷ் ரான தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.

இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 149 ரன்களை அடித்தனர். அதில் வெங்கடேஷ் ஐயர் 57, நிதிஷ் ரான 22, ரிங்கு சிங் 16 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அருமையான ஆட்டம் அமைந்தது.

தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வெறும் 13 பந்தில் 50* ரன்களை விளாசினார். வெறும் 13.1 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்து 9 விக்கெட்டை வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். இதில் ஜெய்ஸ்வால் 98*, சஞ்சு சாம்சன் 48* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இளம் வீரருக்கு எழுந்து வரும் ஆதரவு :

ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய இளம் வீரரான ஜெய்ஸ்வால் 575 ரன்களை அடித்துள்ளார். அதிலும் நேற்று நடந்த போட்டியில் 47 பந்தில் 97* ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆமாம், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில் : “நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக ஜெய்ஸ்வால்-ஐ இன்றே தேர்வு செய்து உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வைத்திருப்பேன். ஏனென்றால் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.”

அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில் “சூப்பராக விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இப்பொழுதே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.”