ஐபிஎல் 2021 ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு வலுவான வீரர்கள் அமைந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள மேக்ஸ்வெல் அதிரடியான வீரர் என்று நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி அதிரடி மன்னன் மற்றும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் ஆட்டம் அரங்கம் அதிரவைத்துள்ளது.
இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டியில் 48 ரன்களையும், சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்களையும் ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 76 ரன்களை விளசியுள்ளார் டிவில்லியர்ஸ்.
டிவில்லியர்ஸ் சரவதேச போட்டியில் இருந்து விலகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறார். அதனால் அவர் வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்று பல கருத்துக்கள் சமுகவலைத்தளங்களில் பரவியது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் ; கடந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் மார்க் பவுச்சர் என்ன விளையாட சொன்னார். ஆனால் இந்த முறை நான் அவரிடம் இதனை பற்றி பேச விருப்பாடுகிறேன். அதனால் ஐபிஎல் 2021 போட்டிகள் முடிந்த பிறகு இதனை பற்றி மார்க் பவுச்சரிடன் நிச்சியமாக பல விசயங்களை பற்றி பேச வேண்டும் என்று கூறியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.