வீடியோ ; ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் பார்த்துருக்கவே முடியாது…! வைரலாகும் பதிவு..!
மேட்ச் 10: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதினர். டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 195 எடுத்துள்ளனர். அதில் ராகுல் 61 ரன்கள் , மயங்க அகர்வால் 69 ரன்கள், கிறிஸ் கெயில் 11 ரன்கள், தீபக் ஹூடா 22 ரன்கள் மற்றும் ஷாருகான் 15 ரன்கள் எடுத்துள்ளனர்.
பின்பு 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.2 ஓவர் முடிவில் 198 ரன்களை எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 32 ரன்கள், தவான் 92 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்கள், ரிஷாப் பண்ட் 15 ரன்கள், மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்த போட்டிக்கு பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 2வது இடத்தில உள்ளது. அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 7வது இடத்தில உள்ளது.
வீடியோ ; ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் பார்த்துருக்கவே முடியாது…! வைரலாகும் பதிவு..!
பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங் செய்யும்போது, 17வது ஓவர் ரிச்சர்ட்சன் பவுலிங் வீசினார். அப்பொழுது அந்த பந்தை எதிர்கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் அதனை தூரமாக அடிக்கும்போது அதனை தீபக் ஹூடா கேட்ச் பிடித்தார்.
அப்பொழுது தீபக் ஹூடா அந்த கேட்ச் பிடித்த விதம் மிகவும் புது விதமாக இருந்தது. பந்தை கீழே விடாமல்… பல முறை பந்தை தட்டி தட்டி இறுதியாக பந்தை பிடித்து ரிஷாப் பண்ட் விக்கெட்டை எடுத்துள்ளார் தீபக் ஹூடா. அதன் வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ ;