அடுத்த போட்டியில் ப்ராவோவுக்கு பதிலாக இவர் விளையாடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை…!!! யார் அந்த வீரர்…!!

அடுத்த போட்டியில் ப்ராவோவுக்கு பதிலாக இவர் விளையாடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை…!!! யார் அந்த வீரர்…!!

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பேட்டிங் சரியாக அமையாத காரணத்தால் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 5 ரன்கள், மயங்க அகர்வால் 0 ரன்கள், கிறிஸ் கெயில் 10 ரன்கள், தீபக் ஹூடா 10 ரன்கள், ஷாருகான் 47 ரன்கள் எடுத்தனர்.

பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 107 ரன்களை எடுத்துள்ளது. அதில் ருதுராஜ் 5 ரன்கள், டுபலஸிஸ் 36 ரன்கள், மொயீன் அலி 46 ரன்கள், ரெய்னா 8 ரன்கள் மற்றும் ராயுடு 0 ரன்கள், சாம் கரண் 5 ரன்கள் எடுத்துள்ளனர்.

அடுத்த போட்டியில் ப்ராவோவுக்கு பதிலாக இவர் விளையாடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை…!!! யார் அந்த வீரர்…!!

சிஎஸ்கே அணிக்கு நல்ல பேட்டிங் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. முதல் போட்டியில் பவுலிங் மோசமாக இருந்தது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் அசத்தியுள்ளது. இருந்தாலும் பவுலிங் எல்லா போட்டிகளிலும் முக்கியமான ஒன்று. அதனால் இப்பொழுது சென்னை அணியில் உள்ள 4 வெளிநாட்டு வீரர்களில் டுபலஸிஸ் முக்கியமான ஓப்பனிங் பேட்ஸ்மேன் அதுமட்டுமின்றி மொயீன் அலி மட்டும் சாம் கரண் சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டர்களாக இருக்கின்றனர்.

அதனால் மீதமுள்ள ப்ராவோவுக்கு பதிலாக புதிதாக பவுளர் , ( இம்ரான் தாகிர், லுங்கி நிகிடி) போன்ற வீரர்கள் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் நிச்சியம் அடுத்த போட்டியில் மாற்றம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த சிஎஸ்கே அணிக்கான போட்டி வருகின்ற திங்கட்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.