இன்றைய போட்டியில் இவர் இல்லையா…! தோனி எடுத்த அதிரடி முடிவு..! சிஎஸ்கே அணி அவ்ளோதானா..!!

இன்றைய போட்டியில் இவர் இல்லையா…! தோனி எடுத்த அதிரடி முடிவு..! சிஎஸ்கே அணி அவ்ளோதானா..!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்கள் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி அணி. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணி சிறப்பான முறையில் பேட்டிங் செய்து 188 ரன்களை எடுத்தாலும். பவுலர்கள் சரமாரியாக ரன்களை வாரி வழங்கினார். அதனால் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சிறப்பான பவுலிங் இருந்தது பேட்டிங் இல்லை.

இந்த ஆண்டு சிறப்பான பேட்டிங் இருக்கு பவுலிங் இல்லை. அதனால் விக்கெட் எடுக்க முடியாமல் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணியின் முக்கியமான பவுலர் ஆன தீபக் சாகர் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

4 ஓவர் பந்து வீசிய தீபக் சாகர் 36 ரன்களை கொடுத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு 9 ரன்கள் என்ற அடிப்படையில் கொடுத்துள்ளார் சாகர், ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி மிகவும் குழப்பம் அடைந்தார்.

நெட் பவுலிங் பயிற்சி செய்யும்போதும் அவரால் சரியான லைனில் பவுலிங் செய்யவில்லை. அதனால் தோனி ஒருவேளை அணியில் இருந்து தீபக் சாகருக்கு பதிலாக வேற ஒரு வீரரை சிஎஸ்கே அணியில் விளையாட அதிகம் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் தீபக் சாகர் முக்கியமான பவுலர், அவரால் முதல் விக்கெட் எடுக்க முடியாது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆபத்தாக மாறிவிடும். அதனால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற முடிவில் தோனி உள்ளார்.

அப்படி ஒருவேளை தீபக் சாகருக்கு பதிலாக யார் அணியில் இடம் பெற்றால் நல்ல இருக்கும் ?? ரசிகர்கள் ஆகிய உங்கள் கருத்து என்ன ??