அடக்கடவுளே….! ஐபிஎல் 2021-யை நிறுத்த போகிறார்களா?? கங்குலி கொடுத்த விளக்கம்..! சோகத்தில் ரசிகர்கள்..!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 தொடங்கி விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் முழ்கியுள்ளனர். இதுவரை 20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
புள்ளிபட்டியலின் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , ஐந்தாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 6வது இடத்தில் பஞ்சாப் அணியும், 7வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , இறுதி இடத்தில் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும் உள்ளது.
இந்தியாவில் இந்த முறை ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் நடக்கபோகின்ற செய்தியை கேட்ட மக்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இப்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ரசிகர்கள் யாரும் மைதானத்தில் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
அதேபோல இந்தியாவில் பல மைதானங்கள் உள்ளது. அதற்கு எல்ல வெற்றிக்கும் சென்று வந்தால் வீர்ரகளுக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வெறும் 6 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் 2021 போட்டிகளை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ.
இப்பொழுது வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பல வீரர்கள் அவரவர் நாட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சோகத்தில் இருக்கின்றனர்.
அதனால் ஐபிஎல் 2021 போட்டிகள் நிறுத்த போகிறார்களா?? இந்த கொரோனா நேரத்தில் எதற்கு ஐபிஎல் போன்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கங்குலி பதிலளித்துள்ளார்.
கங்குலி ; ஒரு சில வீரர் மட்டும் தான் கொரோனாவுக்கு பயந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல அரசாங்கம் சொன்ன படி நங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் எந்த மாற்றமும் இல்லாமல் ஐபிஎல் 2021 போட்டிகள் நடந்து முடியும்.
அதேபோல, பலர் எதற்கு கொரோனா அப்பொழுது ஐபிஎல் என்று கேட்டுள்ளனர், அதற்கு மைதானங்களில் யாரும் அனுமதி இல்லை. மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்த படி போட்டியை பார்க்க போகிறார்கள். இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்றும் கூறியுள்ளார் கங்குலி.