14வது ஐபிஎல் சீசனில் இரு தினங்களுக்கு முன் நடந்த போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதினர். டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்த நிலையில் 159 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ப்ரித்வி ஷாவ் 53 ரன்கள், தவான் 28 ரன்கள், ரிஷாப் பண்ட் 37 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்கள் அடித்துள்ளனர்.
பின்பு 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி இறுதி ஓவர் வரை போராடி அதேபோல 159 ரன்களை அடித்தது. அதனால் சூப்பர் -ஓவர் நடைபெற்றது. அதில் போராடி டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்த போது விஜய் ஷங்கர் வீசிய பந்து மிகவும் விசித்திரமாக இருந்தது. இதன் போன்ற பந்து வீச்சு கிரிக்கெட் போட்டியில் மிகவும் அரிதான ஒன்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை.
12.4 ஓவரில் பந்து வீசிய விஜய் ஷங்கர் அவரது தவறுதலான செயலால் பந்து மிகவும் உயரமாக சென்றது. அது பந்து வீசிய விஜய் ஷங்கருக்கே தெரியவில்லை என்பது தான் நிஜம். அது No-Ball ஆக இருந்தாலும் அதனை அடிக்க முயன்றார் ரிஷாப் பண்ட் .
அதன்வீடியோ இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ ;
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதேபோல 5 போட்டிகளை விளையாடிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி 2 புள்ளிகளுடன் இறுதி இடத்திலும் உள்ளது.