ரசிகர்களிடம் சொன்னதை செய்து காட்டியுள்ளார் இம்ரான் தாகிர்…! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..! அப்படி என்ன சொன்னார் ?
நேற்று 19வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபலஸிஸ் 10 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடி , நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 191 ரன்களை அடித்துள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 33 ரன்கள், டுபலஸிஸ் 50 ரன்கள், சுரேஷ் ரெய்னா 24 ரன்கள், அம்பதி ராயுடு 14 ரன்கள், ஜடேஜா 62 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிவரை போராடி வெறும் 122 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதனால் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது சிஎஸ்கே.
சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் தாகிரிடம் நீங்கள் எப்பொழுது தான் சிஎஸ்கே அணியில் விளையாட போகிறீர்கள் ? அதனை பார்க்க சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கின்றோம் என்று ரசிகர்கள் கேட்டதுக்கு. இம்ரான் தாகிர் ; உங்களது அன்புக்கு நன்றி, இப்பொழுது இருக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.
இதேபோல சிறப்பான முறையில். சிஎஸ்கே அணி எப்பையுமே இருக்க வேண்டும். இது என்னை பற்றிய கருத்து இல்லை, நான் என்பதை விட எங்கள் அணி என்பது தான் சரியாக இருக்கும். எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சியமாக என்னுடைய பெஸ்ட் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். அதேபோல நேற்று நடந்த போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அதிலும் ஒரு ரன்-அவுட் செய்துள்ளார் இம்ரான் தாகிர். வாய்ப்பு கிடைத்தால் பெஸ்ட் கொடுப்பேன் என்று சொன்ன மாதிரி செய்துள்ளார் இம்ரான் தாகிர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 5 போட்டியில் 4 போட்டியில் வெற்றியை கைப்பற்றி 8 புள்ளிகளுடன் ,முதல் இடத்தில் உள்ளது சிஎஸ்கே.