இன்றைய போட்டியில் கேதர் ஜாதவ் விளையாடுவாரா ? தோனியின் அதிரடி பேட்டி ….;

0

இன்று அக்டோபர் 10 தேதி, ஐபிஎல் 25வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பி கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர்.இந்த போட்டி துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் க்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டி முடிந்த பிறகு தோனி கொடுத்த பேட்டியில் ;

சில ஓவரில் விக்கெட்களைதொடர்ந்து இழந்ததால் ரன்களை அடிக்க முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி , எங்கள் அணியால் இறுதி நேரத்தில் பவுண்டரி ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை என்று கேதர் ஜாதவ் பற்றி மறைமுகமாக கூறியுள்ளார்.

கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடியிருந்தால் கண்டிப்பாக சென்னை அணி வெற்றிபெற்று இருக்கும் ஆனால் 12 பந்தில் வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்ததால் சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ;

சென்னை சூப்பர் அணிக்கு எந்த மாற்றமும் தேவை இல்லை. கேதர் ஜாதவ் தவற 4வது பேட்ஸ்மேன் பகுதியில் ஆட வைக்க முடியாது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான போட்டியில் ஏன் பிராவோ மற்றும் ஜடேஜாவுக்கு முன்பு கேதர் ஜாதவ் இறங்கினார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த ஸ்டீபன் பிளெமிங் , சூழல் பந்து பந்தை சுலபமாக கையாளும் திறன் அவருக்கு உள்ளது. அதனால் அவரை முன்னரே விளையாட செய்தோம். ஆனால் எதிர்பாராத வகையில் ஆட்டம் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

பெங்களூர் எதிரான போட்டியில் நிச்சயமாக கேதர் ஜாதவ் இருப்பர் என்று எதிர்பார்க்க பார்க்கப்படுகின்றன. இதுவரை பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 24 போட்டியில் நேருக்கு நேராக மோதியுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.

பெங்களூர்-க்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 793 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான போட்டியில் விராட் கோலி 747 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here