இந்தியாவில் மிகவும் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரே விளையாட்டு அது கிரிக்கெட் தான். அதில் ஐபிஎல் என்றாலே கொண்டாட்டம்தான். இப்பொழுது எல்லாம் T20 இருபது ஓவர் போட்டி என்றாலே சுவரஸ்யம் மட்டுமின்றி அதிகம் எதிர்பார்பையும் கொண்டுள்ளது.
பல தடைகளை தாண்டி ஐபிஎல் போட்டிகள் இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோன வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் இந்தியா நடத்த வேண்டாம் என்று பல நிபுணர்கள் கூறியதால் போட்டியை ஐக்கிய அரபு நாட்டில் வேய்க முடிவு செய்தனர்.
செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று ஆரம்பித்த இந்த ஐபிஎல் 2020 போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி , இதுவரை 6 போட்டியில் விளையாடி 4 போட்டியில் தோல்வியையும் 2 போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. அதில் 20 ஓவர் முடிவில் 167 ரன்களை எடுத்தது. அதன்பின்னர் இறங்கிய சென்னை அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றுவிட்டது.
இதில் கெதர் ஜதேவ் 12 பந்தில் வெறும் 7 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த தோல்வியை பார்த்த சென்னை ரசிகர்கள் மிகவும் கோவம் அடைந்து சமுகவளைதலங்களில் தோனியை பற்றியும் கெதர் ஜதேவ் பற்றியும் கிண்டல் செய்து வருகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றதால் தோனி மற்றும் கெதர் ஜதேவ் தான் காரணம் என்று தோனி மகளுக்கு கொலை மிரட்டல் மட்டுமின்றி ஐந்து வயதான தோனியின் மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது யார் என்று பார்த்தால் !!! தோனியின் ரசிகர்கள் என்று கூறினார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்ததால் மனம் தாங்காத ரசிகர்கள் கோவத்தில் இவ்வாறு பேசிகின்றன !!!
அதில் ஒரு படி அதிகமாக தோனியின் மகள் ஜிவாவுக்கு கற்பழிப்பு மிரட்டலும் வருகின்றன. வெறும் 5 வயது குழந்தையான ஜிவாவுக்கு இந்த மாதிரியான மிரட்டல்கள் மிகவும் கண்டிக்கதக்கது என்று தோனியின் ரசிகர்கள் கூறி வருகின்றன.
கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒன்று புதிதல்ல ஏனென்றால் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால் இவரு நடப்பது சாதாரணம் ஆகிவிட்டது. இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் அனுஷ்க சர்மா இருவரையும் மிகவும் அசிங்கமாக சமுகவளைதலங்களில் பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.