10 ஆண்டுகள் இந்தியா கிரிக்கெட் வீரராக கடந்த பேட்ஸ்மேன் …. யார் அது தெரியுமா ??

0

இந்தியன் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடும் சேடேஷ்வர் புஜாராவுக்கு இன்றுடன் 10 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்கை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டி என்றாலே ராகுல் டிராவிட் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும் , அவருக்கு அடுத்த படியாக சேடேஷ்வர் புஜாரா அந்த இடைத்தை பிடித்துள்ளார்.

சேடேஷ்வர் புஜாராவுக்கு முதல் போட்டி பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான். அந்த போட்டியில் 2வது இன்னிங்க்ஸ்-இல் 72 ரன்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுபயணம் போது நீண்ட நேரம் ஆட்டம் இழக்காமல் விளையாடிய சேடேஷ்வர் புஜாரா 500க்கு அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.

அந்த டெஸ்ட் போட்டியில் நீண்ட ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சேடேஷ்வர் புஜாரா அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார். இதுவரை அவர் ஒரு நாள் போட்டியில் வெறும் 5 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் 77 போட்டியில் விளையாடி 5,400 க்கு அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here