இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பல சாதனையை படைத்து இந்தியாவுக்கு பல பெருமையை வாங்கிக்கொடுத்துள்ளார் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று. நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலி மட்டும் தான் என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் 20 -போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , இன்று முதல் ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது. புனே மைதானத்தில் மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது. ஒருவேளை இந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்தியா வென்றுவிட்டால். அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியா அணி வென்ற பெருமை கிடைக்கும்.
சச்சின் சாதனையை முறியடிப்பாரா? கோலி …! ஆவலாக காத்திருக்கும் கோலி ரசிகர்கள் ; என்ன சாதனை தெரியுமா?
அப்படி என்ன சாதனை என்று தான எல்லாரும் யோசிக்குறீங்க ; இதுவரை இந்தியா கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் ஹாம் (இந்தியா) போட்டிகளில் அதிகமாக சதம் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 164 போட்டிகளில் விளையாடி 20 சதம் அடித்துள்ளார்.
அதன்பிறகு நம்ம இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 95 போட்டிகளில் 19 சதம் அடித்துள்ளார் ஹாம் மைதானத்தில். இதனால் இன்னும் ஒரு சதம் அடித்தால் நிச்சியமாக சச்சின் சாதனையை முறியடிப்பது மிகவும் சுலபமாக மாறிவிடும்.
அதுமட்டுமின்றி கேப்டனாக அதிகம் சதம் அடித்த பட்டியலில் இப்பொழுது விராட் கோலி மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் 41 போட்டிகளில் கேப்டனாக சதம் அடித்துள்ளனர். ஆனால் ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் 41 சதம் அடித்துள்ளார். விராட் கோலி 197 போட்டிகளில் 41 சதம் அடித்துள்ளார்.
இன்று முதல் மூன்று நாட்கள் நடக்க போகின்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங் சாதனையையும் , இரு சதம் அடித்தால் சச்சின் சாதனையையும் முறியடிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.