தோனியை பார்த்து கத்துக்கோங்க கோலி …; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடி கருத்து ..!!

0

இன்று மதியம் 1:30 மணி அளவில், புனேவில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை எதிர்கொள்ள போகிறது இந்தியா கிரிக்கெட் அணி. இந்தியா அணியில் யார் யார் இருப்பார்கள் என்று பல எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

நேற்று மாலை புனே மைதானத்தில் நடந்த பத்திரிகையாளர்களின் பேட்டியில் : கோலியிடம் சில கேள்விகல் எழுப்பினர். அதில் நீங்க எப்படி நீங்களும் உங்கள் அணியின் வீரர்களும் வெளியில் வரும் சமூக கருத்துக்களை பாக்குறீங்க ? என்ற கேள்வியை கோலியிடம் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கோலி ; என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து இறுதி நாட்கள் வரை, வெளியில் இருந்து வரும் சமூக கருத்துக்கள் ஒரு முட்டாள்தனம் போலதான். யார் என்ன சொன்னாலும் , எந்த வீரர் பற்றி சொன்னாலும், அதில் ஒன்றுமே இல்ல.

அதற்கு பின்னல் ஏதாவது நோக்கம் இருக்க என்று கேட்டால் அப்படி ஒன்றும் இருக்காது. இதனையெல்லாம் நாங்க பார்த்தால் எங்களுது விளையாட்டில் நங்கள் கவனம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார் இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி .

தோனியை பார்த்து கத்துக்கோங்க கோலி …; சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடி கருத்து ..!!

இதற்கு இந்தியாவின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ; விராட் கோலி நல்ல பெரிய மனுஷத்தனமாக நடந்துகொள்ள வேண்டும். வெளியில் இருந்து வரும் கருத்துக்கள் முட்டாள்தனம் என்று கூறியுள்ளார். பப்ளிக் போட்டிகளில் கலந்து கொண்டால் கருத்துக்கள் வருவது சாதாரணம் தான்.

அதுமட்டுமின்றி நம் எப்படி விளையாடுகிறோமோ அவ்வாறுதான் கருத்துக்களும் வரும் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். விராட் கண்டிப்பாக அவரது வயதுக்கு தவுந்த மாதிரி பேச வேண்டும் என்றும் முன்னாள் இந்தியா அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை போல நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here