ஐபிஎல் 2021: வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் அணைத்து வீரர்களும் அவரவர் அணிகளுக்கான பயிற்சி முகாமில் கலந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நிச்சியமாக நல்ல ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறை நடைபெற்றது. இருந்தாலும் ஐபிஎல் என்றாலே இந்தியாவில் அது ஒரு திருவிழா போல நடக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடக்கப்போகிறது.
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் முதலில் நாடாகும் சில ஐபிஎல் போட்டிகளில், மைதானத்தில் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி இப்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் ஐபிஎல் 2021 போட்டிகள் முழுவதும் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று நிலைமை தான் வரும்.
இதையும் படியுங்க : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இப்படியெல்லாமா செய்விங்க ; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி
முதல் சில போட்டிகளில் ஐபிஎல் கேப்டன் விளையாடமாட்டார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்… !
இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் கோப்பையை வென்றது இந்தியா அணி. அந்த தன்னம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை ஆடியுள்ளார். நேற்று நடந்த போட்டியில் இந்தியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது ஸ்ரேயாஸ் ஐயர் கீழே விழுந்து அவர் கையில் அடிபட்டது. அதனால் அவரால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. அதனால் வேறு ஒரு வீரர் அவருக்கு பதிலாக விளையாடினார்.
இதன் காரணமாக இனி வரும் இரு ஒருநாள் போட்டி மற்றும் முதலில் நாடாகும் சில ஐபிஎல் போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (or) ரவிச்சந்திர அஸ்வின் ?? என்ற கேள்வி எழுந்துள்ளது..!