நாளை நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் ஆவது இவருக்கு வாய்ப்பு உண்டா..!! என்ன செய்ய போகிறார் ரோஹித் சர்மா..? ராகுல் டிராவிட் உதவி செய்வாரா..?

ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்க உள்ளது. அதனால் இரு அணிகளும் திவிரமான பயிற்சி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட் செய்துள்ளது இந்திய அணி. நாளை நடைபெற உள்ள டி20 போட்டியில் யார் யார் இடம்பெற போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்திய அணியின் விவரம் ;

ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் , ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோனி, முகமது சிராஜ் , அவேஷ் கான், இஷான் கிஷான், வெங்கடேஷ் ஐயர், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும் யார் யார் ப்ளேயிங் 11 ல் இடம்பெற போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில் ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நாட்கள் அதிகமாக போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று வருகிறார். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் தினறிக்கொண்டு வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். ஆனால் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் மட்டும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வருகிறார்.

ஐசிசி உலககோப்பை போட்டிக்கு பிறகு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியது இந்திய. அதில் முதல் 2 போட்டியில் களமிறங்கி விளையாடி வெற்றியை கைப்பற்றியது. பின்னர் மூன்றாவது போட்டியில் ருதுராஜ் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிரங்குவார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆனால் இஷான் கிஷான் அணியில் இடம்பெற்றது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. பின்னர் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடம்பெற்றும் ருதுராஜ் கெய்க்வாட் – க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆமாம்… 4வதாக பேட்டிங் செய்யும் கே.எல்.ராகுல் , அப்பொழுது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி வந்த காரணத்தால் ருதுராஜ் -க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் இப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளார். அதனால் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிக திறமை இருந்தும் ஏன் ருதுராஜ் கெய்வாட்-க்கு வாய்ப்பு கிடைக்கமால் இருப்பது சரியா ???உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…!!!