ஐபிஎல் போட்டிக்கு டாட்டா சொல்ல போகிறார் ..தல தோனி … முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது…. ஐபிஎல் 2021 தான் இறுதியா ?

ஐபிஎல் போட்டிக்கு டாட்டா சொல்ல போகிறார் ..தல தோனி … முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது…. ஐபிஎல் 2021 தான் இறுதியா ?

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30 வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதில் சிஎஸ்கே அதிகபட்ச போட்டிகளில் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.அதன்விளைவாக ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் போய்விட்டது.

அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு முக்கியமான காரணம், இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் எல்ல முறையும் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெரும்.ஆனால் கடந்த ஆண்டு தான் மிஸ் ஆகிவிட்டது.

அதற்கு காரணம் தோனி தான்,அவருக்கு வயதாகிவிட்டது. அதனால் இனிமேல் அவரால் விளையாட முடியாது. தோனியை அணியில் இருந்து தூக்குங்கள் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்தை கூறி வந்தனர். அப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நான் நிச்சியமாக ஐபிஎல் 2021யில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் தோனி.

ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னாள் நடந்த ஐபிஎல் 2021யில் சிஎஸ்கே அணிக்கான முதல் போட்டியில் ஒரு ரன்களை கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார் தோனி . அதனால் தோனிக்கு வயது 39 ஆகிவிட்டது.

எனிமேல் அவர்கிட்ட எதையும் ரசிகர்கள் எதிர்பார்க்க முடியாது என்று தோனியை பிடிக்காதவர்கள் கருத்தை பகிர்ந்துள்ளார். அதனால் நிச்சியமாக ஐபிஎல் 2021தான் அவருக்கு இறுதியாக இருக்கும் என்று ஆணித்தனமாக கூறியுள்ளனர்.

அதற்கு முதல் காரணம் ; இந்த ஆண்டு மே மாதத்தில் புதிய இரு ஐபிஎல் அணிகளை பிசிசிஐ அறிமுகம் செய்யவுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. எல்ல அணிகளும் மூன்று வீரர்களை தவிர எல்ல வீரர்களையும் ஏலத்தில் விட வேண்டும்.

அப்படி பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான மூன்று பேர் என்றல் அது தோனி , சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா. இதில் தோனி மற்றும் ரெய்னா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வதேச போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனால் எப்போ வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சியம் வேற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவாக இருக்கும்.

இதனை மனதில் வைத்து இந்த ஆண்டு ஓட ஐபிஎல் இருந்து தோனி விலக அதிகம் வாய்ப்புள்ளது என்பது உண்மை. ஆனால் தோனி என்ன செய்யப் போகிறரர் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.