சத்தியமா இந்த வீரருக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரவே கூடாது… !! சேட்டன் சக்ரியாவின் சோகமான வாழ்க்கை கதை..!! மற்றும் சாதனை.. ! முழு விவரம் …!!!

மேட்ச் 4; நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ். வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 221 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிவரை போராடி 4 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் 3வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுளர் சேட்டன் சக்ரியா அணியில் புதிதாக அறிமுகம் ஆனவர். அதிலும் முதல் போட்டியிலேயே 3 முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியாது மட்டுமின்றி இரு அசத்தலான கேட்ச் பிடித்துள்ளார் சேட்டன் சக்ரியா. அதனால் அவரது ஆட்டம் மிகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் சேட்டன் சக்ரியா தேர்வு செய்யப்பட்டதை ஓட்டி , அவரின் அம்மாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேட்டன் சக்ரியாவின் அம்மா ; எங்கள் குடும்பம் மிகவும் சாதாரணமான ஒன்றுதான். சேட்டனின் அண்ணா சக்ரியா சில பிரச்சனை காரணமாக தூக்கு மாட்டிக்கொண்டர். அப்பொழுது சேட்டன் முக்கியமான போட்டியான சையத் முஷ்டாக் அலி விளையாடி கொண்டு இருந்தார்.

அப்பொழுது அவர் அண்ணன் இறந்த செய்தியை அவரிடம் சொன்னால் நிச்சியமாக அவரது கவனம் சேதரிவிடும் அதனால் நாங்கள் 10 நாட்கள் அதனை மறைத்தோம். அவர் தினமும் கால் செய்யும்போது அவரது அண்ணனிடம் கால் தர சொல்லுவர். ஆனால் நான் வேறு ஏதாவது பேசி கால் கட் செய்துவிடுவேன். ஆனால் ஒருநாள் என்னால் அந்த வேதனையை தாங்க முடியாமல் சொல்லிவிட்டேன்.

சேட்டன் சக்ரியா எங்கள் மேல் கோவப்படு கொஞ்சம் நாட்கள் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் இறுதி அவர் ஐபிஎல் போட்டியில் 1.20 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்ற செய்தி எங்களுக்கு மிகவும் சந்தோசமான செய்தியாக இருந்தது என்று கூறியுள்ளார் சேட்டன் சக்ரியாவின் அம்மா.