டி-20 உலகக்கோப்பையில் யார் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று மனம் திறந்த கோலி ..! அதிர்ச்சியில் இந்தியா ரசிகர்கள்..!

கடந்த வாரம் ஐந்து டி-20 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி டி-20 சீரியஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதிலும் முதல் நான்கு போட்டிகளில் தள இரு போட்டிகளில் வென்றுள்ளது இரு அணிகளும். இறுதி போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவானது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தேர்வு செய்தது. கோப்பையை கைப்பற்றும் போட்டியில் அனைவரும் முதலில் பௌலிங்கை தான் தேர்வு செய்வார்கள் ஏனென்றால் அப்பொழுது தான் எதிரணி வைக்கும் ரன்களை எடுக்கமுடியும் என்று. இருந்தாலும் மனம் தளராமல் இந்தியா அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அடிச்சு தொம்சம் செய்தனர்.

20 ஓவர் முடிவில் இந்தியா அணி 224 ரன்களை எடுத்துள்ளது. அதிலும் விராட்கோலி 80 ரன்களை ஆட்டம் இழக்காமல் இறுதிவரை போராடினர். ஆனால் இங்கிலாந்து அணி இறுதி வரை போராடி 188 ரன்களை மட்டுமே எடுத்ததால் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி.

டி-20 உலகக்கோப்பையில் யார் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று மனம் திறந்த கோலி ..! அதிர்ச்சியில் இந்தியா ரசிகர்கள்..!

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20யில் , முதல் 4 போட்டியிலும் கே.எல்.ராகுல் சரியான ஓப்பனிங் தரவில்லை என்றே சொல்லலாம். 4 போட்டிகளில் சேர்த்தி வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் இரு போட்டிகளில் எந்த ரன்களை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் இறுதி போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி நல்ல ஒரு ரன்களை எடுத்துள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகளில் மட்டுமின்றி டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் ரோஹித் ஷர்மாவுடன் வீட்டா கோலி ஓப்பனிங் செய்ய வேண்டும் என்று பல கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நான் ஓப்பனிங் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டார். அதனால் உலகக்கோப்பையில் நீங்க ஓப்பனிங் பேட்டிங் செய்விர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

டி-20 உலகக்கோப்பையில் நானும் ரோஹித் ஷர்மாவும் ஓப்பனிங் செய்வது பற்றி இப்பொழுது உறுதியாக சொல்ல முடியாது என்றும் உலகக்கோப்பை சமையத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் விராட் கோலி . ரசிகர்கள் விராட் கோலி தான் ஓப்பனிங் செய்ய வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் கருத்தை சொன்னவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.