நடராஜன் ; ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் நட்ராஜனின் குறைந்த பட்ச விலை இதுதான் ; லட்சம் இல்லை கோடி ; அடேங்கப்பா…! மாஸ் பண்ணிட்டீங்க…!

ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுவார்த்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சுடுபிடிக்க தொடங்கிவிட்டது தான் உண்மை. ஆமாம் இப்பொழுது தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் இந்திய அணி கவலைக்கிடமாக தான் உள்ளது. ஏனென்றால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர்களை தென்னாபிரிக்கா அணி வென்றுவிட்டது. நிலையிலும் ஐபிஎல் 2022 பற்றி அவ்வப்போது தகவல் வெளியாகிக்கொண்டே வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை வழக்கம் போல் இல்லாமல் மெகா ஏலம் நடத்த போவதாக பிசிசிஐ கூறியது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றும் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் என்றும் பிசிசிஐ கூறியுள்ளனர்.

அதேபோல, புதிய அணிகளுக்கு ஏலத்தில் பங்கேற்க போகின்ற வீரர்களில் இருந்து மூன்று வீரர்களை கைப்பற்றிக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளது பிசிசிஐ. அதில் ஒரு வெளிநாட்டு வீரர், இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தான். லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளும் தங்களது மூன்று வீரர்களை அறிமுகம் செய்த நிலையில், நேற்று வீரர்களின் குறைந்தபட்ச விலையின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

தமிழக வீரரான நடராஜன் கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 3 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் அவருடைய ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லாத காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றியது பஞ்சாப் கிங்ஸ்.

அதன்பின்னர் 2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார் நடராஜன். ஆனால் 2020 ஆம் யாக்கர் மன்னன் என்று அழைக்கப்பட்ட நடராஜனுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் பாகத்தில் அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை,

பின்னர் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்றது அங்கு நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் அவரால் போட்டிகளில் விளையாட முடியமால் போனது. ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்க போகும் நடராஜன் அவரது அடிமட்ட (Base) விலையாக 1 கோடிக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி இந்திய அணி, தமிழக அணியிலும் அவருக்கான வாய்ப்பு பெரிய அளவில் வழங்கப்படவில்லை. அதனால் நடராஜனை எந்த அணியில் கைப்பற்ற போகிறார்கள் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.