ஐயோ..! சுரேஷ் ரெய்னா ஐபிஎல் டி20 2022 போட்டிகளில் விளையாடவில்லையா ?? என்ன தான் ஆச்சு ? சின்ன தலைக்கு ? முழு விவரம் இதோ ;

0
Advertisement

ஐபிஎல் டி20 போட்டிகளில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது.

அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் ஆரம்பித்த ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக விளையாடி வருகிறார். அதுவும் தோனியுடன் களமிறங்கி விளையாடி வருகிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் தொடக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை விளையாடினார் சுரேஷ் ரெய்னா. ஆனால் ஐபிஎல் 2021 போட்டியின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் பல வாய்ப்புகள் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

இறுதி கட்டத்தில் அவருடைய முதுகில் பலமாக அடிபட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்ப அணியில் இடம்பெற்றார். முதல் சில போட்டிகளில் சற்று சொதப்பல் ஆட்டத்தை விளையாடினாலும் பின்னர் போக போக ரன்களை அடித்து தொம்சம் செய்தார் உத்தப்ப. அதனால் சிஎஸ்கே அணி இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு தான் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இறுதி போட்டியில் விளையாடதது. அதனால் சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்த சென்னை அணி, சுரேஷ் ரெய்னாவை கைவிட்டது.

இதுதான் முதல் முறை சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளது. அதனால் புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளில் ஒரு அணியில் கேப்டனாக சுரேஷ் ரெய்னா இடம்பெருவார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுவிடுவாரோ என்று பல கேள்விகள் எழுந்தன.

ஆனால் அது இல்லை, இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்கள் பட்டியல் மற்றும் அவர்களது குறைந்தபட்ச விலை பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் 2 கோடி ருப்பைக்கு நிர்ணயம் ஆகியுள்ளார். எந்த அணியில் இடம்பெற போகிறார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here