ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. என்ன தான் கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் ஐபிஎல் லீக் போட்டிகள் இதுவரை 14 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்க போவதாக பிசிசிஐ கூறியது. அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த முறை இன்னும் இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.
அதுதான் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகள் தான். மெகா ஏலம் நடைபெற போவதால் பழைய 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துள்ளது கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். பின்னர், மீதமுள்ள அதாவது ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்களில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய ஒரு அணிகளும் தலா மூன்று வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் , அதிலும் ஒரு வெளிநாட்டு வீரர், இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் தான் என்று பிசிசிஐ கூறியது.
இதில் ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்வது வழக்கம் அதில் தமிழக வீரர் மற்றும் பினிஷர் ஆன ஷாருக்கான் வெறும் 20 லட்சம் ரூபாய் அதாவது அடிமட்ட விலைக்கு அவரை நிர்ணயம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சையத் முஸ்தக் அலி டி20 போட்டியில் இறுதியில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்து கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார் ஷாருக்கான்.
அதனால் நிச்சியமாக அதனை எல்லாம் மனதில் வைத்து தான் ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சியமாக இவரை கைப்பற்ற அதிகபட்சமாக அனைத்து அணிகளும் முயற்சி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஷாருக்கான் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.